அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா
அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு, பெரும் எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று வருகின்றது.
ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் (Kamala Harris), குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் (Donald Trump) வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 538 இடங்களில் 270 இடங்களில் வெற்றிபெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில்,தேர்தலில் இருவரும் சமமாக, அதாவது 269 - 269 இடங்களில் வென்றால், ஜனாதிபதி எப்படி தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கையில் , ``ஒருவேளை இந்தத் தேர்தலில் இருவரும் சரிக்கு சமமான இடங்களை வென்றால், அந்தத் தேர்தல் "contingent election" னாக மாறும்.
அதைத் தொடர்ந்து, அமெரிக்க சட்டத் திருத்தம் 12-ன் படி, அமெரிக்க பிரதிநிதிகள் சபை (US Congress - அமெரிக்காவின் கூட்டாட்சி அரசின் சட்டமன்றம்.) யிடம் அடுத்த ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வழங்கப்படும்.
அமெரிக்க சட்டம்
ஒரு வேட்பாளர் பெரும்பான்மையைப் பெறும் வரை, சபையில் வாக்களிப்பு தொடரும். அதுவரை அவையின் சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவியில் இருப்பார்.
பதவியேற்பு நாள்வரை எந்த வேட்பாளரும் வெற்றிப்பெறவில்லை என்றால், மேல் சபையான செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாக பதவியேற்பார்."என்கிறார்கள்.
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |