அமெரிக்க தேர்தல் முடிவுகள் உக்ரைனுக்கு மேலும் உதவிகளைப் பெற்றுத்தரும் என நம்புகிறேன்:ஜெலென்ஸ்கி
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றமையானது ரஷ்யாவுடனான தனது 4.5 ஆண்டு காலப் போரில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளைப் பெற்றுத்தரும் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு காங்கிரஸின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றுவதால் ஏற்படும் மாற்றங்கள் உக்ரைன் தலைநகரான கீவ்விற்குச் சாதகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக ஜெர்மனியின் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,"நான் குடியரசுக் கட்சியினருக்கும் நன்றி கூறுகிறேன், ஆனால் ஜனநாயகக் கட்சியினர் உக்ரைனை ஆதரிப்பது மற்றும் அதற்கு உதவி வழங்குவது பற்றி மிகத் தெளிவாகப் பேசுகிறார்கள்.
ஆதரவு கிடைக்கும்
அவர்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான தொடர்பைப் புதுப்பிப்பது பற்றிப் பேசுகிறார்கள். எனவே, ஒரு அதிகாரச் சமநிலை உருவாகி, எங்களுக்கு மேலும் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அமெரிக்காவின் கூடுதல் உதவி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று ஜெலென்ஸ்கி கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |