விசா விண்ணப்பதாரர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரம் விடுத்துள்ள எச்சரிக்கை
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், குற்றப் பதிவுகள் மற்றும் விண்ணப்பச் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தவறான தகவல்கள் ஆகியவை அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடைகளுக்கு வழிவகுக்கும் என விசா விண்ணப்பதாரர்களை எச்சரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சிறிய குற்றச் செயல்கள் கூட விசா மறுப்புக்கு வழிவகுக்கும் என்றும், தூதரக அதிகாரிகளுக்கு விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணித் தகவல்களை அணுகும் வசதி இருப்பதால், முந்தைய மீறல்கள் அல்லது கைதுகளை அவர்கள் கண்டறியக்கூடும் என்றும் தூதரகம் கூறியுள்ளது.
விசா விண்ணப்பங்களிலும் நேர்காணல்களின் போதும் உண்மையான தகவல்களை வழங்குமாறு விண்ணப்பதாரர்களைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நேர்மை அவசியம்
இந்நிலையில், தவறான தகவல்கள் அல்லது பொய்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்க வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

இதன்படி, விசா செயல்முறை முழுவதும் நேர்மையாக இருப்பது அவசியம் என அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 1 மணி நேரம் முன்