ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தனது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் 'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் இராணுவ பலத்தை அழித்தது உட்பட தொடர்ச்சியான வெற்றிகள் அடையப்பட்டுள்ளதாகவும், ஈரானின் ஏவுகணைத் திறன் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆயுத உற்பத்தி வசதிக் அழிப்பு
ஈரானின் இராணுவ உபகரண உற்பத்தி வசதிகளை அழிக்க முடிந்தது என்றும், அதன் விளைவாக, ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க ஒருபோதும் முயற்சிக்காது என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image Credit: Reuters
மேலும், இஸ்ரேல், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகள் உட்பட மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளை ஈரானிய அச்சுறுத்தல்களிலிருந்து தனது நாடு பாதுகாத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் பிற நாடுகள் அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் தொடர்புடைய குறிப்பில் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
you may like this