வெனிசுலாவிற்கு எதிரான இராணுவக் கட்டமைப்போடு கியூபாவை நோக்கும் அமெரிக்கா

United States of America Venezuela
By Dharu Nov 04, 2025 09:22 AM GMT
Report

அமெரிக்கா கரீபியன் பகுதியில் 1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இராணுவக் குவிப்பை மேற்கொண்டுள்ளது.

2025 நவம்பர் 4 ஆம் திகதி நிலவரப்படி, வெனிசூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை மையப்படுத்தி அதிகாரப்பூர்வமாக "போதைப்பொருள் தீவிரவாதிகளான" ட்ரென் டி அராகுவா கும்பல் மற்றும் கார்டல் ஆஃப் தி சன்ஸ் (வெனிசூலா இராணுவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் குழு) போன்றவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும், ஆட்சி மாற்ற நோக்கங்கள் இருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

மதுரோவின் முக்கிய பங்காளி நாடான கியூபாவைப் பிரித்து,  வெனிசூலா எண்ணெய் விநியோகத்தைத் துண்டிப்பதன் மூலம் பரந்த பிராந்திய நெருக்கடியைத் தூண்டலாம் எனக் வல்லுநர்களும் அதிகாரிகளும், கருதுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா மேற்கொண்ட படகு தாக்குதல்களிலிருந்து நில இலக்குகள் வரை இந்த அதிகரிப்பு 2025 ஓகஸ்ட் இறுதியில் தொடங்கியது.

இடைநிறுத்தப்படும் மன்னார் காற்றாலை திட்டம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

இடைநிறுத்தப்படும் மன்னார் காற்றாலை திட்டம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

லத்தீன் அமெரிக்கா

டொனால்ட் ட்ரம்ப் லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் வினியோகத்துக்கு எதிராக கொடிய சக்தியை அனுமதித்து, அவற்றை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தமை பேசுகொருளாகியியிருந்தது.

இதன்படி தற்போது 10க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள், உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி USS Gerald R. Ford கேரியர் ஸ்ட்ரைக் குரூப் கப்பல், வழிகாட்டு ஏவுகணை அழிப்பான்கள் ( USS Sampson), குரூசர்கள் மற்றும் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல், B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரெஸ் மற்றும் B-1 லான்சர் குண்டுவீச்சு விமானங்கள் என்பன வெனிசூலா கடற்கரையிலிருந்து 20 மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

வெனிசுலாவிற்கு எதிரான இராணுவக் கட்டமைப்போடு கியூபாவை நோக்கும் அமெரிக்கா | Us Eyes Cuba With Military Buildup

சுமார் 10,000–16,000 அமெரிக்க படையினர், மரைன்கள் மற்றும் அமெரிக்காவின் 160வது சிறப்பு செயல்பாட்டு வான்படை பிரிவு உட்பட, புவெர்ட்டோ ரிகோவில் (நீண்டகாலமாக செயலற்ற தளம் மீண்டும் இயக்கப்பட்டது) மற்றும் USS Iwo Jima போன்ற தாக்குதல் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறப்பு செயல்பாட்டு ஹெலிகாப்டர்கள் ("லிட்டில் பேர்ட்ஸ்" விரைவு ஊடுருவலுக்கு) மற்றும் ட்ரோன்கள் கடற்கரையிலிருந்து 90 மைல்கள் தொலைவில் காணப்பட்டுள்ளன.

இதற்கமைய செப்டம்பரிலிருந்து, வெனிசூலா கடற்கரையில் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் படகுகள் மீது குறைந்தது ஐந்து வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டு, 27க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இது CIA வெனிசூலாவுக்குள் இரகசிய கொடிய செயல்பாடுகளை மேற்கொண்டதால் நடத்தப்பட்டது என விவரிக்கப்படுகிறத.

இது மதுரோ அல்லது ஆட்சி நபர்களை இலக்காகக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஒக்டோபரில் அமெரிக்காவிற்கு வெனிசூலா எண்ணெய், தங்கம், கனிமங்களை வழங்கி அழுத்தத்தைக் குறைக்கும் முன்மொழிவை ட்ரம்ப் நிராகரித்தமையம் காரணமாக கூறப்படுகிறது.

வெனிசூலா ஜனாதிபதி மதுரோ Su-30 Mk2 போர் விமானங்களை Kh-31 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுடன் தயார்படுத்தி, கராகஸ் பகுதிகளில் பயிற்சிகளை நடத்தியுள்ளார். மேலும் அமெரிக்கா தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு முறையிட்டார்.

சிறுபான்மையினரின் தரவுகள் சரியாக பதியப்படவேண்டும்!

சிறுபான்மையினரின் தரவுகள் சரியாக பதியப்படவேண்டும்!

ரஷ்யா, சீனா உறவு

மேலும், ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து  இராணுவ உதவி பெற்று, அமெரிக்க நடவடிக்கைகளை "ஏகாதிபத்திய படையெடுப்பு" என சித்தரிக்கிறார்.

வெனிசூலா 125,000 வலிமை கொண்ட இராணுவத்தையும், 8 மில்லியன் பொதுமக்கள்  மற்றும் ELN படைகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

வெனிசுலாவிற்கு எதிரான இராணுவக் கட்டமைப்போடு கியூபாவை நோக்கும் அமெரிக்கா | Us Eyes Cuba With Military Buildup

எண்ணெய் அழுத்தம் காரணத்தால், ஆட்சி வீழ்ச்சி இலக்காக வெனிசூலா உடனடி இருந்தாலும், கியூபா அதன் பட்டியலில் முக்கியமாக உள்ளது.

கியூபா -  அமெரிக்க தடைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தைத் தாங்க தினசரி 100,000 பீப்பாய்கள் வரை தள்ளுபடி வெனிசூலா எண்ணெயை நம்பியுள்ளது.

இதன்படி அமெரிக்கா வெனிசூலா மீது வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்ட்ால் எண்ணெய் வினியோகம் துண்டிக்கப்படலாம்.

இது கியூபாவின் எரிசக்தி நெருக்கடியை மோசமாக்கும் (2025ல் மின்தடை 40% அதிகரிப்பு).

அமெரிக்க உளவுத்துறைப்படி, கியூபா ஆலோசகர்கள் வெனிசூலா படைகளுக்கு "அனைத்து மக்களின் போர்" கெரில்லா தந்திரங்களைப் பயிற்றுவித்துள்ளனர்.

கியூபா வெளியுறவு அமைச்சர் புரூனோ ரோட்ரிகுஸ் அமெரிக்க "இராணுவமயமாக்கலின்" "கணிக்க முடியாத பேரழிவு விளைவுகளை" எச்சரித்து, ஐ.நா. தலையீட்டை வலியுறுத்தினார்.

இறக்குமதி வரி திருத்தம்: கிடைத்தது அமைச்சரவையின் அனுமதி

இறக்குமதி வரி திருத்தம்: கிடைத்தது அமைச்சரவையின் அனுமதி

அதிகபட்ச அழுத்தம்

ஜூன் 2025ல் ட்ரம்ப் "அதிகபட்ச அழுத்த" தடைகளை மீட்டெடுத்து, கியூபா மருத்துவ ஊழியர்களின் விசாக்களை இரத்து செய்து, ஐ.நா. தடை நீக்க தீர்மானத்திற்கு எதிராக யுக்ரேனில் கியூபாவின் 5,000 போராளிகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

வெனிசுலாவிற்கு எதிரான இராணுவக் கட்டமைப்போடு கியூபாவை நோக்கும் அமெரிக்கா | Us Eyes Cuba With Military Buildup

கொலம்பியா, பிரேசில் போன்ற நட்பு நாடுகள் சர்வதேச பிரிகேட்களைத் தயார்படுத்துகின்றன.

கயானா எல்லைத் தகராறுகளால் அமெரிக்க நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.

விமர்சகர்கள், அமெரிக்க சட்டமியற்றுனர்கள் அங்கீகரிக்கப்படாத போரை என்னி அஞ்சுகின்றனர், லத்தீன் அமெரிக்காவின் சதி வரலாற்றை இவர்கள் நினைவூட்டுகின்றனர் என விளக்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024