ட்ரம்பினால் அதிரடி மாற்றம் கண்ட அமெரிக்க தங்க விலை
அமெரிக்காவில் (United States) தங்க விலை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த வாரத்திலிருந்து தங்க விலை சர்வதேச சந்தையில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அமெரிக்கா ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி அச்சுறுத்தல்களை மீண்டும் அந்நாட்டின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசெண்ட் சென்ற வாரம் உறுதிபடுத்தி இருந்தார்.
தங்க விலை
இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் தங்க விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இன்றைய (19) நிலவரப்படி அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 0.4 சதவீதம் அதிகரித்து $3,216.29 இற்கு விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகப் போர்கள்
அதேபோல், வெள்ளி ஒரு அவுன்ஸ் 0.1 சதவீதம் அதிகரித்து $32.31 இற்கும், பிளாட்டினம் 0.2 சதவீதம் அதிகரித்து $989.31 இற்கும், பல்லேடியம் 0.3 சதவீடம் அதிகரித்து $963.94 இற்கும் விற்பனையாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசெண்ட் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க அரசாங்கத்துடனான ஒப்பந்தங்களில், நம்பிக்கைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாத நிறுவனங்கள் மீது உரிய வரியை ட்ரம்ப் விதிப்பார்” என தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் வர்த்தகப் போர்கள் உலகளவில் வர்த்தக ஓட்டங்களை கடுமையாக சீர்குலைத்துள்ள நிலையில், பங்கு சந்தைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
