போருக்கு மத்தியிலும் ஐநா கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவர்களுக்கு விசா அளித்தது அமெரிக்கா
அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும், நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விசா அனுமதி அளித்துள்ளது.
ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்க ஈரானின் "முக்கிய குழுவினர்" மற்றும் அவசியமான பணியாளர்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்தது.
போர் நிறுத்தப்படாத நிலையிலும் விசா அனுமதி
விசா தொடர்பான தனியுரிமை சட்டங்கள் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, இந்த குழுவில் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வரும் சூழலிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அல்லது ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லாத நிலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |