இந்த 6 நாட்டவர்கள் அமெரிக்கா செல்ல தடை - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
6 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் (USA) நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்த 6 நாடுகளைச் சேர்த்துள்ளார்.
வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்
வொஷிங்டனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேசிய பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து மற்றுமொருவர் படுகாயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் நோக்கில் ட்ரம்ப் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

"வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்" மற்றும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
நேற்று (16) கையெழுத்திடப்பட்ட புதிய பிரகடனத்தின் மூலம், முழுமையான அல்லது பகுதியளவு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் 19 இலிருந்து 39 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்