ஐக்கிய நாடுகள் சபையில் வார்த்தையால் மோதிக்கொண்ட அமெரிக்கா - ஈரான்

Middle East World
By Dharu Apr 28, 2026 10:05 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் தொடங்கிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்த (Nuclear Non-Proliferation Treaty) மீளாய்வு மாநாட்டில், ஈரானின் பங்கு தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த கூட்டமானது நேற்று(287.04.2026) இடம்பெற்றுள்ளது.

1970-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த NPT ஒப்பந்தத்தின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் 11-வது மாநாடு நியூயார்க்கில் ஆரம்பமானது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அதிரடி! முக்கிய அமைப்பொன்றின் 22 உறுப்பினர்கள் பணிநீக்கம்

ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அதிரடி! முக்கிய அமைப்பொன்றின் 22 உறுப்பினர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவின் குற்றச்சாட்டு

மாநாட்டிற்கான 34 துணைத் தலைவர்களில் ஒருவராக ஈரான் தேர்வு செய்யப்பட்டதாக, மாநாட்டின் தலைவர் மற்றும் வியட்நாமின் ஐ.நா. தூதர் டோ ஹுங் வியட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் வார்த்தையால் மோதிக்கொண்ட அமெரிக்கா - ஈரான் | Us Iran Clash At The United Nations

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு பணியகத்தின் உதவிச் செயலாளர் கிறிஸ்டோபர் ஏ. ஃபோர்ட், “NPT விதிமுறைகளை தொடர்ந்து மீறி வரும் ஈரானை இப்படிப்பட்ட பதவிக்கு தேர்வு செய்தது அவமதிப்பானது எனக் கூறியுள்ளார்.

மேலும், ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்து International Atomic Energy Agency(IAEA) உடன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஈரானின் IAEA தூதர் Reza Najafi, அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்ற மற்றும் அரசியல் நோக்கமுடையவை எனத் திட்டவட்டமாக மறுத்தார்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய ஒரே நாடான அமெரிக்கா தன்னை விதிமுறைகளின் காவலராக காட்டிக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி

ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி

அணு ஆயுத தயாரிப்பு

இந்த விவகாரம், சமீபத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட இரு மாத மோதலின் மையப்புள்ளியாகவும் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் வார்த்தையால் மோதிக்கொண்ட அமெரிக்கா - ஈரான் | Us Iran Clash At The United Nations

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்ட,

“ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் பெற அனுமதிக்கப்படாது” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரான், யுரேனியத்தை அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே செறிவூட்டுவதாகக் கூறி வந்தாலும், மேற்கத்திய நாடுகள் அது அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படலாம் என்று எச்சரித்து வருகின்றன.

IAEA மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீட்டின்படி, ஈரான் 2003-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அணு ஆயுதத் திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

மேலும், வளைகுடாப் பகுதி கப்பல் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அணுசக்தி பேச்சுவார்த்தைகளை ஒத்திவைக்கத் தயாராக இருப்பதாக ஈரான் முன்மொழிந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் Karoline Leavitt, “ஈரான் தொடர்பான அமெரிக்காவின் சிவப்பு கோடுகள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

போர்நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்

போர்நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி