தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கில் வரலாறு காணாத போர்க்கப்பல்கள் குவிப்பு
ஈரான் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்கா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் போர்க்கப்பல்கள் மற்றும் விமானப் படைகளைக் குவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் அணுசக்தி குறித்த மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமல் முற்றுப்பெற்றுள்ளன, இது போருக்கான சூழலை அதிகரித்துள்ளது.
ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை அழிக்க வேண்டும் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்து வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் நட்பு நாடுகள் மீது கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இவ்வாறு போர் மேகம் சூழ்ந்துள்ளதால், இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினரை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதுடன், குடிமக்களையும் எச்சரித்துள்ளது.
இது குறித்து மேலும் ஆராய்கின்றது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |