இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி : ஈரான் ஜனாதிபதி குற்றச்சாட்டு
ஈரானுடனான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த விரும்புவதாக ஈரான் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஈரான் அதன் அண்டை நாடுகளை சகோதரர்களாகக் கருதுவதாகவும் எங்கள் ஈரான், எங்கள் நாடு, கொடுமைப்படுத்துதலுக்கு எளிதில் அடிபணியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முன்வைத்த குற்றச்சாட்டு
இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்தி தங்கள் தீங்கிழைக்கும் நோக்கங்களைச் செயல்படுத்த இஸ்லாமிய நாடுகள் அனுமதிக்கக்கூடாது என்று பெஷேஷ்கியன் மேலும் வலியுறுத்தினார்.
Iran's President Masoud Pezeshkian said that the U.S. and Israel want to create division between Islamic countries as the U.S.-Israeli war with Iran entered a second week. He also added that "Our Iran, our country, will not bow easily in the face of bullying." pic.twitter.com/5vRlyUv0fH
— Reuters (@Reuters) March 9, 2026
எந்த தயக்கமும் இல்லாமல் 168 குழந்தைகளைக் கொன்ற அமெரிக்காவும் இஸ்ரேலும் வெட்கப்படுவதில்லை எனவும் காசாவில் 50000 - 60000 மக்களைக் கொன்றதற்கு அவர்களுக்கு எந்த அவமானமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
எமது நாட்டை முழு பலத்துடன் தாக்குபவர்களுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என கூறினார்.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, தெஹ்ரான் பல வளைகுடா நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய நிலையில் அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து நடத்தியதாக தெரிவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |