நான்கு வருடங்களுக்கு பின்னர் 3 ரஷ்யக் கப்பல்கள் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா
அமெரிக்க திறைசேரிசெவ்வாயன்று(31) மூன்று ரஷ்ய சரக்குக் கப்பல்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய தளவாட நிறுவனமான FESCO-வுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல்களான FESCO Moneron மற்றும் FESCO Magadan ஆகியவற்றையும், ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் நிதி நிறுவனமான ஆல்ஃபா-வங்கியுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக முன்னர் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பொது சரக்குக் கப்பலான SV Nikolay-ஐயும் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) தடைப்பட்டியலிலிருந்து நீக்கியது.
2022 முதல் தடை செய்யப்பட்டிருந்தன
இந்தக் கப்பல்கள் அனைத்தும் 2022 முதல் தடை செய்யப்பட்டிருந்தன. இந்த நீக்கங்களுக்கான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா-ரஷ்யா இடையேயான பரந்த இராஜதந்திர உறவுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்