அமெரிக்க ஜாக்பாட் வரலாற்றில் இரண்டாவது பெரிய தொகை வென்ற நபர்
அமெரிக்காவின் பிரபலமான லொத்தர் சீட்டான 'பவர்பால்' லொத்தரின் நேற்று (25) இடம்பெற்ற சீட்டிழுப்பில் மிகப்பெரிய பரிசுத் தொகை வெல்லப்பட்டுள்ளது.
ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த 1.8 பில்லியன் டொலர் பெறுமதியான பாரிய ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.
அமெரிக்க லொத்தர் வரலாற்றில் தனி நபர் ஒருவர் வெற்றி பெற்ற இரண்டாவது மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகிறது.
2 டொலர் விலை
2 டொலர் விலையில் விற்கப்படும் இந்த லொத்தர் சீட்டில் 4, 25, 31, 52, 59 ஆகிய இலக்கங்களும், சிவப்பு நிறத்தில் இலக்கம் 19 ம் என 6 இலக்கங்கள் பொருந்தியுள்ளன.

இதற்கமைய, இந்தப் பரிசுத்தொகையை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளவோ அல்லது 29 வருட காலப்பகுதியில் தவணை முறையில் பெற்றுக்கொள்ளவோ வெற்றியாளருக்கு வாய்ப்புள்ளது.
எனினும், அநேகமான வெற்றியாளர்கள் பரிசுத்தொகையை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளும் தெரிவையே நாடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மிகப்பெரிய பரிசுத்தொகை
அமெரிக்க லொத்தர் வரலாற்றில் சீட்டு ஒன்றிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகையாக, 2022 ஆம் ஆண்டில் நபர் ஒருவரால் வெல்லப்பட்ட 2.04 பில்லியன் டொலர் பதிவாகியுள்ளது.

1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த லொத்தர் சீட்டிழுப்பானது, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 45 மாநிலங்களில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |