மூதூர் மத்திய கல்லூரியில் இடிந்து வீழ்ந்த வகுப்பறை கட்டிடம்
மூதூர் மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடமொன்று நேற்று இடிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது. இதற்கு முதலும் இன்னுமொரு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் காணப்படும் கட்டிடங்கள் சுமார் 60 வருடங்கள் பழமையான கட்டிடமாக காணப்படுவதாகவும் புதிய கட்டிடம் கிடைக்குமாக இருந்தால் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
மக்கள் பேரணி
இதேவேளை பழைய கட்டிடங்கள் ஆபத்து மிக்கதாக இருப்பதாக தெரிவித்து சில மாதங்களுக்கு முன்னால் மக்கள் பேரணி நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ள அனர்த்தத்தினாலும், சூறாவளியாலும் மூதூர் மத்திய கல்லூரி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டிடமொன்று உடைந்து சேதமாகியுள்ளது.
புதிய அரசாங்கம்
மாணவர்கள் இல்லாத வேளையில் கட்டிடம் உடைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் இருந்திருந்தால் பாரிய அனரத்தம் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நல்லதொரு புதிய அரசாங்கம் வந்திருப்பதாகவும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மூதூர் மத்திய கல்லூரிக்கு புதிய கட்டிடம் ஒன்று அமைத்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |