மோசடி மின்னஞ்சல் என ஒதுக்கியவருக்கு அடித்த ஜாக்பொட் : இன்ப அதிர்ச்சியில் அவர்
மோசடி மின்னஞ்சல் என்று ஒதுக்கிய நபருக்கு உண்மையிலேயே சுமார் மூன்றரை கோடி ரூபாய் ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார் 67 வயது முதியவர் ஒருவர். அமெரிக்காவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒன்லைன் லொட்டரி கேம்களில் ஆர்வம் மிகுந்த இவர் மிச்சிகன் லொட்டரி ஜாக்பொட் பரிசுக்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். இதற்கான முதல் சுற்றில் வெளியேறிய அவருக்கு இரண்டாவது வாய்ப்பை பெற்றது தெரியவில்லை.
மோசடி மின்னஞ்சல்கள்
இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்ற அந்த நபர் 416,322 அமெரிக்க டொலர்களை பரிசாக குவித்துள்ளார். ஜாக்பொட் பரிசு வென்றது குறித்த மின்னஞ்சலையும் பெற்றுள்ளார். ஆனால் அந்த மின்னஞ்சல் வழக்கம்போல் வரும் மோசடி மின்னஞ்சல்கள் என்று நினைத்த அந்த நபர், அந்த மின்னஞ்சலை கண்டும் காணாமல் விட்டுவிட்டார்.
தான் இரண்டாவது சுற்றில் பங்கேற்றது அவருக்கே தெரியாது என்பதால் அந்த நபர் தனக்கு பரிசு கிடைத்ததை நம்பவில்லை. தனக்கு வந்த மின்னஞ்சல் மோசடி மின்னஞ்சல் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
தற்செயலாக மின்னஞ்சலை பார்த்த நிலையில்
பின்னர் அந்த மின்னஞ்சலை எதார்த்தமாக பார்த்த அந்த நபர், தனக்கு 416,322 அமெரிக்க டொலர்கள் பரிசாக கிடைத்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
லொட்டரி தலைமையகத்தில் தான் வென்ற லொட்டரி பரிசை அந்த நபர் பெற்றுள்ளார். அந்த தொகையை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும், மீதமுள்ளவற்றை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |