போரின் பார்வையில் அமெரிக்க இடைத்தேர்தல்: உக்ரைன், ரஷ்யா ஈரானில் ஏற்பட்ட எதிர்வினை
உக்ரைன், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் உள்ள மக்களுக்கு, அமெரிக்க இடைத்தேர்தல்கள் என்பது உள்நாட்டு அரசியலை விட, அதன் முடிவு நடந்துகொண்டிருக்கும் மோதல்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியதாகவே இருந்தது.
உக்ரைனில், வர்ணனையாளர்கள் போரை ட்ரம்ப் கையாண்ட விதம் குறித்துக் கவனம் செலுத்தினர்.
உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றிய ட்ரம்பின் தொடர்ச்சியான கூற்றுகளைக் குறிப்பிடும் வகையில், சில பத்திரிகையாளர்கள் "எல்லாப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தார், ஆனால் தன் சொந்தப் போரில் தோற்றார்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் வெற்றி
ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றிகள் மொஸ்கோ மீதான கடுமையான தடைகளுக்கான ஆதரவை வலுப்படுத்தும் என்று கீவ்வில் உள்ள சில அரசியல் தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அதே வேளை, அமெரிக்காவில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டையானது உக்ரைன் கொள்கை தொடர்பாகப் புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என்றும் ஒரு தரப்பினர் விவாதிக்கின்றனர்.
இந்நிலையில் மொஸ்கோவில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை ட்ரம்ப் தொடர்வார் என்றும், இந்த மாதம் மேலும் ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் கிரெம்ளின் பகிரங்கமாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீதான தடை
ஆனால், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ், கிரெம்ளினுடன் எதிர்காலத்தில் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்வதற்கோ அல்லது ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்துவதற்கோ ட்ரம்பின் திறனைக் கட்டுப்படுத்தக்கூடும் என்று போருக்கு ஆதரவான ரஷ்ய தரப்பினர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஈரானின் தலைமையும் அரசு சார்பு ஊடகங்களும், ஜனநாயகக் கட்சியின் வெற்றிகளை ட்ரம்பின் போர்க் கொள்கைக்கு எதிரான ஒரு பகிரங்கக் கண்டனமாகச் சித்தரித்துள்ளன.
இதன்படி அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கர்கள் போருக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர் என்று வாதிட்ட நிலையில், ஈரானிய ஊடகங்கள், தெஹ்ரானுடனான இராணுவ மோதலின் அதிகரித்து வரும் அரசியல் விலை எனத் தாங்கள் விவரித்ததை முன்னிலைப்படுத்தியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |