ஈரானுக்கு தண்ணி காட்டியது அமெரிக்கா : ஹோர்முஸ் ஊடாக 70 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
United States of America
Iran
Strait of Hormuz
By Jaso
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் நிலவி வந்தபோதிலும், சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக குவைத் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களும் ஹோர்முஸ் கடல் வழிப்பாதையை மீண்டும் பதற்றமடையச் செய்துள்ளன.
இதற்கிடையே அமெரிக்க இராணுவம் கடந்த 3 வாரங்களில் 70 வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியே வழிநடத்தியுள்ளது.
அமெரிக்கா பயன்படுத்திய ரகசிய தந்திரோபாய முறை
ஈரானின் பாதுகாப்பு ராடர்களில் சிக்காமல் இருக்க ரகசிய வழிசெலுத்தல் என்ற தந்திரோபாய முறையை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

இந்த 70 வணிகக் கப்பல்களும் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் சமிக்ஞைகளை முழுமையாக அணைத்து வைக்குமாறு அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து ஈரானிய ராடர்களால் இக்கப்பல்களைக் கண்காணிக்க முடியாது போனது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி