ஹோர்முஸில் ஈரானிய ட்ரோன்களை துவம்சம் செய்த அமெரிக்க ராணுவம்!
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே ஈரானின் பல ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இப்பகுதியில் உள்ள சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஈரான் பல தாக்குதல் ட்ரோன்களை ஏவியதாக, எக்ஸ் பதிவொன்றில் சென்ட்காம் தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து
இதன்படி, நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில மணிநேரங்களில் அங்கு வந்த அனைத்து ட்ரோன்களையும் அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன என்று அமெரிக்க ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
Iran launched multiple one-way attack drones in an attempt to strike commercial ships transiting the Strait of Hormuz. U.S. forces have downed all of them in recent hours as traffic flow through the strait continues unimpeded. The international trade corridor remains open for…
— U.S. Central Command (@CENTCOM) June 13, 2026
மேலும், சர்வதேச வர்த்தக வழித்தடம் எவ்விதப் பாதிப்புமின்றி தற்போதும் போக்குவரத்திற்காகத் திறந்தே உள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |