பிறக்கும் பராபவ வருடத்தில் கடற்போர்களுக்கு பலன்!
சித்திரை புத்தாண்டு நாளை பிறக்க காத்துள்ள பின்னணியில் சோதிடத்தில் நம்பிக்கையீனம் கொண்டவர்களைத் தவிர அநேகமான தமிழர்கள் தமக்குரிய புத்தாண்டு ராசி பலன் எப்படியிருக்கும் என ஆர்வப்படுவது இயல்பு.
பராபவத்தன் மேதினில் நான்குவகைப் பல்லுயிர்க்கும் இன்பம் என இருக்கும் பழைய இடைக்காடர் சித்தரின் பாடலின் பின்னணியில் நாளை பிறக்கும் பராபவ வருடத்துக்குரிய பொதுப்பலன் என்னவோ அனைத்து மக்களும் செல்வச் செழிப்புடன் இன்பமாக வாழக்கூடிய வருடம் எனத்தான் நம்பி கை வைக்கச்சொல்கிறது.
எனினும் ஒரு சில சோதிடர்களோ நாளை வருடம் பிறக்கும்போது செவ்வாயும், சனியும் சேர்ந்து வருவதும் இந்த வருடம் முழுவதும் சனி மீனராசியில் அமர்ந்திருக்கும் நிலையானது கடற்போர்களின் வெடிப்பு, உண்மைக்கு புறம்பானவற்றின் திரிப்பு என சில அபாயங்களை கொண்டுவரும் என ஆருடம் சொல்ல அமெரிக்க அரசதலைவர் ட்ரம்ப்பின் இன்றைய ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் இவையெல்லாம் இன்னும் நடக்குமோ என அச்சமடையத்தான் செய்கிறார்கள்.
பாகிஸ்தானில் நடந்த அமெரிக்காவுடனான பேச்சுக்களின் போது, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட மறுத்தமைக்கு பதிலடியாக, ட்ரம்ப்பின் இந்த ஹோர்முஸ் நீரிணை முற்றுகை பதிலடி வர இந்த பதிலடிக்கும் இன்னொரு பதிலடிக்கு ஈரான் எடுக்க பராபவ வருடத்தின் பிறப்பு உலக பதற்றத்தை தர இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |