ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை தாக்குதல்! மாயமான பணியாளர்கள்
United States of America
Iran
By Dharu
ஹோர்முஸ் நீரிணையில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் கொடி ஏந்திய வர்த்தகப் படகு மீது அமெரிக்கக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் பத்து பணியாளர்கள் காயமடைந்ததாகவும், மேலும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஓமானில் உள்ள ஹோர்முஸ் நீரிணை மற்றும் மக்ரான் கடல் பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
15 பணியாளர்கள்
மினாப் கவுண்டி கடல் பகுதிக்கு அருகே சென்ற ஒரு வர்த்தக கப்பல் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.

இந்த கப்பலில் மொத்தம் 15 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் பத்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளையில், உள்ளூர் குழுக்களும் தேடுதல் குழுக்களும் மற்ற பணியாளர்களின் நிலையை அறிய முயன்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி