உச்சக்கட்ட வெப்பம் - அமெரிக்காவின் புதிய முயற்சி
அமெரிக்காவில் நிலவும் கடுமையான வெப்பத்தை தணிப்பதற்காக அதன் முக்கிய நகரங்களில் குளிரூட்டும் மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் சிகாகோ, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களிலேயே இம்மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.
வெப்ப அலை பாதிப்பு

தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்ப அலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பலர் நோய் தாக்கத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்ப அலை வீசும் என்றும் இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.