அமெரிக்காவின் உயர்மட்ட விமானப்படைகளின் தளபதி இலங்கை விஜயம்
அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஸ்னைடர், மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று (21) இலங்கையை வந்தடைந்துள்ளார் என கொழும்பில் உள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஜூன் 21 முதல் 24 வரையான அவரது பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப் படையின் மூத்த அதிகாரிகள் உட்பட இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார்.
பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
வான் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு, இணையப் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் பரந்த ஒத்துழைப்பு வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும்.

கூட்டு இராணுவப் பயிற்சிகள், இராணுவப் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான உயர்மட்டக் கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவில், ஜெனரல் ஸ்னைடரின் பயணம் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |