அமெரிக்கா அரசியல் விவகார துணைச் செயலாளர் இலங்கை விஜயம்
Sri Lanka
United States of America
Economy of Sri Lanka
By Dharu
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி வரை அவர் நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அவர், அமெரிக்க - இந்திய வருடாந்த வெளிநாட்டு அலுவலக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
75வது ஆண்டு நிறைவு
மேலும், இலங்கையில், அமெரிக்க - இலங்கை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகள் தொடர்பில், துணைச் செயலாளர் நுலாண்ட் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி