ட்ரம்பின் மத்தியக்கிழக்கு நகர்வுக்கு எதிராக வலுத்து வரும் அமெரிக்க அரசியல் எதிர்ப்பலைகள்
அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், இஸ்ரேலிய தலைவர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணைந்து மத்திய கிழக்கில் "பிராந்திய போரை" தொடங்கியதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது மனிதநேய பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், லெபனானில் பெருமளவு சிவிலியன்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் எலிசபெத் வாரன், எக்ஸ் தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) வெளியிட்ட பதிவில்,
Pay attention to Lebanon.
— Elizabeth Warren (@SenWarren) March 21, 2026
Trump and Netanyahu started a regional war in the Middle East, creating a humanitarian disaster.
And now, the Israeli army has killed over 1,000 people in Lebanon—about 20% of them are kids.
Congress should not bankroll this escalating war of choice.
மனிதநேய பேரழிவு
"லெபனானை கவனியுங்கள். ட்ரம்ப்பும் நெதன்யாகுவும் மத்திய கிழக்கில் பிராந்திய போரைத் தொடங்கியுள்ளனர். இது மனிதநேய பேரழிவை உருவாக்கியுள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "இஸ்ரேல் ராணுவம் லெபனானில் 1,000க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளது. அதில் சுமார் 20 சதவீதம் குழந்தைகள்.
காங்கிரஸ் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட போருக்கு நிதி வழங்கக்கூடாது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்தில் போர்
இதனால் பிராந்தியத்தில் போர் விரிவடைவதாகவும், மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளதாகவும் வாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் இத்தகைய போர்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விமர்சனம், ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கு கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகக் கட்சியினரின் கடுமையான எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் போர் தொடர்பான மேலும் விவரங்கள் வரும் நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
you may like this