பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ள அமெரிக்க - சீன தலைவர்களின் சந்திப்பு - வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் (Xi Jinping) இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்வான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இது பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம் என தொடர்ந்தா மோதல்ட போக்க தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது விவகாரம் என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இரு நாட்டு உயர் அதிகாரிகளின் ஏற்பாட்டில் அமெரிக்க அதிபர் மற்றும் சீன அதிபருக்கும் இடையில் இந்த ஆண்டுக்குள் காணொளி ஊடாக பேசுவார்த்தை நடத்தவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபரை காணொளி ஊடாக சீன அதிபர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.