சீனாவுக்கே ஆயுதம் விற்க முயன்ற ட்ரம்ப்...! வெள்ளை மாளிகை அளித்த அவசர விளக்கம்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் (Xi Jinping) அமெரிக்க விஜயத்தின் போது சீனா அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்க விரும்புகிறதா என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வினவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பர்டியூ (David Perdue) இதனை தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுத விற்பனை
தைவானுக்கான அமெரிக்க ஆயுத விற்பனை தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், ஒரு கட்டத்தில் நீங்கள் (சீனா) ஏதேனும் அமெரிக்க ஆயுதங்களை வாங்க விரும்புகிறீர்களா? என ஷி ஜின்பிங்கிடம் நேரடியாகக் கேட்டதாகத் தூதர் பர்டியூ குறிப்பிட்டுள்ளார்.
தைவானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் இராணுவ உதவிகள் மற்றும் $14 பில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனைத் தொகுப்பு குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வணிக நடவடிக்கை
தைவானுக்கு ஆயுதங்களை வழங்குவது சர்வதேச அளவில் சாதாரணமான ஒரு வணிக நடவடிக்கையே என ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே செயற்கை நுண்ணறிவு (AI), வர்த்தகம் மற்றும் தைவான் இறைமை தொடர்பாகப் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்த சலுகை பல தசாப்தகால அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தூதரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சீனாவுக்கு அவ்வாறு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் தற்போது அரசிடம் இல்லை என வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |