இலங்கை மீதான வரியை குறைத்த அமெரிக்கா : நிதியமைச்சின் அறிவிப்பு
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் அமெரிக்கா குறைத்துள்ளது.
இது தொடர்பான விடயங்களை விளக்கி நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) கருத்து வெளியிட்டுள்ளார்.
அதாவது "இந்த சவால்களுடன், புதிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இரு நாடுகளும் எதிர்காலத்தில் இதன் மூலம் நமக்குத் தேவையான பலன்களைப் பெறப்போகின்றன என்பதை இது காட்டுகிறது.
சஜித் வெளியிட்ட பதிவு
இலங்கைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக நாங்கள் கருதுகிறோம், மேலும் இந்த கலந்துரையாடல்களை தொடர நாங்கள் விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட வரி விகிதத்தை 20 சதவீதம் ஆகக் குறைப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
Glad US cut tariffs to 20 % for Sri Lankan goods. Puts us with Vietnam and Bangladesh while India pays 25 %. We should aim under 15 % to give our exporters real lift. We should have a team of trade economists and lead negotiators to keep pushing. https://t.co/KwAvWquI7V
— Sajith Premadasa (@sajithpremadasa) August 1, 2025
இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் மீதும் இதேபோன்ற 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
நமது ஏற்றுமதியாளர்களுக்கு உண்மையான நன்மையை வழங்க, அந்த விகிதத்தை 15 சதவீதம் ஆகக் குறைக்க அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்” என வலியுறுத்துகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
