வெள்ளையர் தென்னாப்பிரிக்கர்களே இலக்கு! அமெரிக்கா வெளியிட்ட அகதிகள் சேர்க்கை வரம்பு
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நாட்டிற்குள் அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை 7,500 ஆகக் கட்டுப்படுத்தவுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கையில் பெரும்பாலும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெள்ளையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரையிலான அடுத்த நிதியாண்டில் 7,500 அகதிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
மனிதாபிமான அக்கறை
இந்த வரம்பு "மனிதாபிமான அக்கறைகளால் நியாயப்படுத்தப்படுகிறது என்றும், வேறுவிதமாக தேசிய நலனுக்காக உள்ளது" எனவும், வெள்ளை மாளிகை விளக்கப்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க அகதிகள் மற்றும் "அந்தந்த தாய்நாட்டில் சட்டவிரோத அல்லது நியாயமற்ற பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட பிறருக்கு" முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்க-மெக்சிகோ எல்லைப் பகுதியில் கொள்கை மற்றும் நடைமுறையில் கத்தோலிக்க சமூக போதனையின் முன்னோக்கைப் பயன்படுத்துவதற்காகப் பணியாற்றும் ஒரு குழுவின் நிர்வாக இயக்குனர் டிலான் கார்பெட் “நிர்வாகத்தின் அகதிகள் மீள்குடியேற்ற இலக்குகள் ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல என்றும், இன்னும் மோசமானவை எனவும், அவை வெளிப்படையாக இன ரீதியாக சார்புடையவை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் மனித இடப்பெயர்ச்சியின் வளர்ந்து வரும் யதார்த்தம் படைப்பாற்றல் மற்றும் செயலைக் கோரும் நேரத்தில், அமெரிக்கா அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களைப் பாதுகாப்பதில் அதன் தலைமைப் பங்கைக் கைவிடுகிறது" என்று கார்பெட் கூறியுள்ளார்.
இந்நிலையில் முந்தைய நிதியாண்டில் அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் வரம்பை 125,000 ஆக நிர்ணயித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        