போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி போதைப்பொருளுடன் கைது!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியொருவர் போதைப்பொருளுடன் நல்லத்தண்ணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டம் நல்லத்தண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கடந்த சில மாதங்களாக சந்தேகநபர், கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு நேற்றிரவு (30.10.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கையிருப்பு
கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து போதை வில்லைகள் மற்றும் 77 மில்லி கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இவர் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் கிளையை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இன்று (31.10.2025) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்