அநுர அரசின் புதிய பாதுகாப்புச் சட்டத்தால் அதிரும் இலங்கை...!
தேர்தல் காலத்தில் System Change என்ற கோஷத்துடன் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம், தற்போது கொண்டுவந்துள்ள புதிய சட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் அரச பாதுகாப்புச் சட்டம் தொடர்பான நகர்வுகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பினர் மத்தியில் பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலமானது, முன்னைய காலங்களை விடவும் கடுமையான அதிகாரங்களை ஜனாதிபதிக்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் வழங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இதனைப் பயன்படுத்திப் பல போராட்டக்காரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரச நிர்வாகத்தை முடக்கும் வகையில் அல்லது அரச சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் எத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வரையறுக்கப்பட்டு பிணையில் வரமுடியாதவாறு கைதுகள் முன்னெடுக்கப்படுவது அநுர அரசின் மீதான ஜனநாயக நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஒருபுறம் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் அதிரடிச் சோதனைகள் வரவேற்கப்பட்டாலும், மறுபுறம் அரசியல் ரீதியாகத் தன்னை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதற்குப் புதிய சட்டங்கள் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற ஐயப்பாடு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
அநுர அரசின் இந்த அதிரடிச் சட்டப் பாய்ச்சல் நாட்டுக்குத் தேவையான ஒழுக்கமா? அல்லது இது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான ஒரு கடுமையான ஒடுக்குமுறையா ? என்ற அடிப்படையில் கடும் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.
இந்த புதிய சட்டங்களின் பின்னணியில் சிக்கியுள்ள நபர்கள், தொடரும் கைதுகள் மற்றும் அநுர அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |