வெளிநாடொன்றில் சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோமா (Goma) நகரிலிருந்து வடமேற்கே சுமார் 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சுரங்கம் கடந்த புதன்கிழமை (28) இடிந்து விழுந்தது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் சந்தைப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும் முக்கிய சுரங்கமாக கருதப்படும் ருபாயா சுரங்கத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.
உலகிற்குத் தேவையான கோல்டன் கனிமத்தில் சுமார் 15 வீதம் இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |