அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக சபை மீண்டும் கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (31) விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் நடைபெறவுள்ளது.
அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால கால அவகாசம், நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
தொழிற்சங்க நடவடிக்கை
இந்த நிலையில், இன்றைய நிர்வாக சபை கூட்டம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமல் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |