அமெரிக்க தடை கபில உயிரிழப்பு: சர்ச்சையை கிளப்பும் மரண பினாமிகள்
ராஜபக்ச அதிகார மையத்தின் முன்னைய ஊழல் மற்றும் மோசடிகளின் மையப்புள்ளியில் ஒருஹீரோ. சிறிலங்கன் எயார் லைன்ஸ்சுக்கு 58.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டாலும் அந்த இழப்பை ஏற்படுத்திய கொள்வனவு ஒன்றால் கிட்டிய இலஞ்சப்பணத்தில் மகிந்தவுக்கு 60 மில்லியன் ரூபா 3 தவணைகளாக செலுத்தியதாக விசாரணைகளில் ஒப்புக்கொண்ட ஒருமுகம்.
அதேபோல மகிந்தவுக்கு கொடுத்த இந்த பெரிய சம்திங் போக தனக்கும் 2 மில்லியன் டொலரை அமுக்கிய முகம்.
இவ்வாறான தில்லாலங்கடி ஊழல்களால் அமெரிக்காவால் 2024 தடைவிதிக்கப்ட்ட முகம் என பல அடுக்கடுக்கான பல முகங்களை கொண்ட ஒரே முகமான கபிலசந்திரசேனா இனி இல்லை.
அதுவும் சிறிலங்கா திறைசேரியில் இடம்பெற்ற 2.5 டொலர் மோசடி தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் உயிர்மாய்ப்பு செய்த ஒருவாரகாலத்தில் இன்று கபில சந்திரசேன இன்று உடலமாக மீட்கப்பட்ட சம்பவமும் அதன் பின்னணி பரபபரப்பை ஏற்படுத்துகிறது.
தமது அதிகார காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணையில் மையப்புள்ளியாக இருந்த ஒரு முக்கிய முகத்தின் அகால மரணம் ராஜபக்சக்களுக்கு அதிர்ச்சியா? அல்லது ஆசுவாசமா? விடை தெரிவில்லை
இதேபோல அக்கரையில் விஜய்யின் தமிழகவெற்றிக்கழகத்தை ஆட்சியமைக்கவிடாமல் திமுகவும் - அதிமுகவும் குண்டக்க மண்டக்க செய்து ஆட்சியமைக்க முயல்வது யாருக்கு அதிர்ச்சி யாருக்கு ஆதங்கள் என்ற வினாக்கள் உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |