ஈரானின் ஏவுகணை உற்பத்தி திட்டத்தில் தொடர்பு! இந்திய - சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டங்களுடன் தொடர்புடைய 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
அதன்போது, இந்தியா, சீனா, ஹொங்காங், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஈரானின் ஆயுத உற்பத்தி மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிப்புரையில் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா விதித்த தடை
இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.

Image Credit: NBC News
அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈரான் அணுசக்தி உறுதிப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததால், கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா விதித்த தடைகள் தொடர்ச்சியாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |