வெளிநாட்டில் பதுங்கியுள்ள இலங்கையரை தேடும் அமெரிக்கா
Sri Lanka
United States of America
Drugs
By Jaso
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துபவர்களில் முக்கியமான ஒருவரை அமெரிக்கா தேடிவருவதாக குற்றவியல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shiran Basik) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாககாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து தப்பியோடி வெளிநாடு ஒன்றில் மறைந்திருக்கும் ஷிரான் பாசிக்கை, இராஜதந்திர மட்டத்தில் இலங்கையும் அமெரிக்காவும் கோரியுள்ளதாகத் தகவல்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு ஊடகமொன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதி காவல்துறை மா அதிபர் இதனை தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி