அமெரிக்காவிற்கு பாரிய அச்சுறுத்தல்: பீதியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் அதிகரித்த பதற்றங்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களும் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியது.
இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியில், பல ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரக வளாகங்களை குறிவைத்ததையடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதை அடுத்து, வெளியுறவுத் துறை கடைசியாக ஆகஸ்ட் 2022 இல் இதுபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டது.
பயங்கரவாத அமைப்புகள்
அல்-கொய்தாவின் ஆதரவாளர்கள் அல்லது அதனுடன் இணைந்த பயங்கரவாத அமைப்புகள், அமெரிக்காவைத் தாக்க முற்படலாம்" என்றும் எச்சரிக்கபட்டுள்ளது
எனவே வெளிநாட்டில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு "சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வரும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டில் அவசரகாலத்தில் உங்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கவும் வெளியுறவுத் துறையின் "ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட் திட்டத்தில் (STEP) சேரவும் அறிவுறுத்தியுள்ளது.