மில்லியன் கணக்கான குழந்தைகளின் தரவுகளை திரட்டிய மெட்டா: அமெரிக்காவில் வழக்கு தாக்கல்
11 மற்றும் 12 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான குழந்தைகள் மெட்டாவின் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி வருவதை அறிந்திருந்தும், அதைத் தடுக்க மெட்டா நிறுவனம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளது.
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், நேற்று இந்த வழக்கு முதல் முறையாக நடுவர் குழுவின் முன் விசாரணைக்கு வந்தது.
கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி ஆகிய நான்கு மாநிலங்கள் கூட்டாக இந்த வழக்கை முன்னெடுத்துள்ளன.
200 பில்லியன் டாலர் இழப்பீடு
மேலும் மெட்டா நிறுவனம் மீது 200 பில்லியன் டொலர் அபராதம் மற்றும் இழப்பீடு விதிக்குமாறு அவை நீதிமன்றத்தைக் கோரியுள்ளன.

பெற்றோரின் அனுமதியின்றி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தரவுகளைச் சேகரித்தல், மற்றும் குழந்தைகளிடையே மனநல நெருக்கடியை ஏற்படுத்தும் லைக்குகள், ரியாக்ஷன்கள், கமெண்ட்கள், ஸ்க்ரோலிங் போன்ற அடிமையாக்கும் அம்சங்களை உருவாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு அமைந்துள்ளது.
மெட்டாவின் வணிக மாதிரியை நான்கு பகுதிகளாக எளிமையாகச் சுருக்கிக் கூறலாம் என நேற்று கலிபோர்னியா தலைமை சட்டத்தைரணிகள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதில், பயனர்களை வலையில் வீழ்த்தி, அவர்களை முடிந்தவரை நீண்ட நேரம் செயலியில் வைத்திருந்து, அவர்களின் தரவுகளைச் சேகரித்து, பின்னர் உண்மையை பொதுமக்களிடமிருந்து மறைப்பது அடங்கும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும், அடுத்த ஆறு வாரங்களில் நடுவர் மன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பார் என அமெரிக்க தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening