நிலைகுலைந்த அமெரிக்க பங்கு சந்தை : அச்சத்தில் உலக முதலீட்டாளர்கள்
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆரம்பித்து வைத்த வர்த்தக போர் உலக பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக முதலீட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரண்டாம் திகதியன்று டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளின் பொருட்கள் மீது குறைந்தபட்சம் பத்து சதவீதம் இறக்குமதி வரி விதித்தார்.
அத்தோடு, அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடுகள் மீது கூடுதல் வரிகளை ட்ரம்ப் விதித்தார்.
வர்த்தக போர்
ட்ரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் வர்த்தக போருக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதனை உறுதி செய்வது போல் ட்ரம்ப் வரி விதித்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் சீனா பதிலடி கொடுத்தது.
இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34 சதவீதம் வரி விதித்த நிலையில் சர்வதேச வர்த்தக போர் வெடிக்கும் என்ற அஞ்சம் அதிகரித்தது.
இதன் விளைவாக தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று (04) பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடுமையான வரி
கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் S&P 500 இன்டெக்ஸ் சுமார் ஆறு சதவீதம் சரிவடைந்ததுள்ளதாகவும் இதே காலத்தில் அமெரிக்க முதலீட்டாளர்கள் ஐந்து லட்சம் கோடி டொலரை பங்குச் சந்தையில் இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் கடுமையான வரிகளிலிருந்து தடுமாற்றமடைந்த பொருளாதாரத்தையும், வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தையையும் காப்பாற்ற அந்நாட்டின் பெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதங்களை குறைக்கும் என்று நம்பும் முதலீட்டாளர்களும் ஏமாற்றமடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க பெடரல் வங்கி கவர்னர் ஜெரோம் பவல் நேற்று (04) இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், வரிகள் பணவீக்கத்தை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை மெதுவாக்க கூடும் எனவும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் பெடரல் வங்கி விழிப்புடன் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வல்லுனர்கள்
இது தவிர பார்க்லேஸ் பொருளாதார வல்லுனர்கள் கணிப்பின் படி, அமெரிக்காவில் பணவீக்கம் இந்த நான்கு சதவீதத்தை தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்கும் எனவும் இது மந்தநிலையுடன் ஒத்துப்போகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, சிட்டி நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கையில், உலகின் பிற பகுதிகளும் இந்த வலியிலிருந்து தப்ப முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் வளர்ச்சியில் ஒரு சதவீத அளவுக்கு பாதிப்பை சந்திக்கும் எனவும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இது போன்ற அடியை சந்திக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 16 மணி நேரம் முன்
