இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!
அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள் மீதான பரஸ்பர வரிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா (Harsha de Silva) இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தியாவுடனான டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகள் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா மீது பரஸ்பர வரி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 2 முதல் இந்தியா மீது பரஸ்பர வரிகளை அறிவித்துள்ளார், இது இந்த கடுமையான வரிகளுடன் மோதக்கூடிய சுதந்திர வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகளில் கடினமான பாதையை முன்னெடுத்துச் செல்வதை எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது.
Trump’s reciprocal #tariffs w/ India should be wake-up call for #Srilanka. We need urgent, proactive measures to address before trade walls block our access to the US - our largest export market. Inexperience in foreign policy isn't an excuse. As #COPF Chair, I'm ready to assist. pic.twitter.com/70RxLfKLtb
— Harsha de Silva (@HarshadeSilvaMP) March 6, 2025
இதேவேளை, மார்ச் மாத தொடக்கத்தில், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரிகளை விதிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
முன்னெச்சரிக்கை
இந்த நிலையில், சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அமெரிக்காவின் மூன்று முன்னணி வர்த்தக கூட்டாளிகளும் சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட கணிசமாக அதிக வர்த்தக தடைகளை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அறிவிப்புகள் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
