மத்திய கிழக்கில் குவியும் அமெரிக்க ஆயுதங்கள்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு 8.6 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அவசர அனுமதி வழங்கியுள்ளது.
இதில் குவைத் மற்றும் கத்தாருக்கான மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளும், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கான லேசர் வழிகாட்டுதல் ஏவுகணைகளும் முக்கிய இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக ஈரானுடனான போரினால் அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) ஏவுகணைக் கையிருப்பு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையிலும் கத்தாருக்கு அந்த ஏவுகணைகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுத விற்பனை
வழக்கமாக இத்தகைய பாரிய ஆயுத விற்பனைகளுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இருப்பினும், தற்போது நிலவும் அசாதாரணமான சூழலை அவசர நிலை என வகைப்படுத்தி நாடாளுமன்ற மறுஆய்வைத் தவிர்த்து வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ நேரடியாக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நாடுகளுக்கு உடனடியாக ஆயுதங்களை விநியோகிக்க வேண்டியதன் அவசியத்தை விரிவான ஆதாரங்களுடன் அவர் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் தொடங்கிய பிறகு இத்தகைய அவசர கால அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை விற்பனை செய்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |