போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்குப் பாரிய தடை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அதற்கு முப்படைகள் மற்றும் காவல்துறையினரும் விசேட பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள்
கண்டியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக வெளிநாடுகளில் பதுங்கியிருந்து போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களைக் கைது செய்து நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இலங்கையின் முப்படைகளை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |