அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஈரானில் தரையிறங்கவுள்ள அமெரிக்க துருப்புக்கள்
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நிலையிலும், அமெரிக்கா மேலதிகமாக 10,000 தரைப்படை வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்புவதைப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பென்டகன் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியாகிய இந்த தகவலில் இந்தப் படைப்பிரிவு காலாட்படை (infantry) மற்றும் கவச வாகனங்கள் (armored vehicles) உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
இந்தக் படைகள், ஏற்கனவே அப்பகுதிக்கு அனுப்ப உத்தரவிடப்பட்ட படைகளுடன் இணைக்கப்படும் என்றும், சுமார் 5,000 மரைன் (Marines) வீரர்கள் 82வது வான்வழிப் பிரிவு (82nd Airborne Division) இலிருந்து சுமார் 2,000 முதல் 5,000 வரை வான்படை வீரர்கள் (paratroopers) உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மீதான இராணுவ அழுத்தம்
இந்த நகர்வு, ஈரான் மீதான இராணுவ அழுத்தத்தை அதிகரிப்பதோடு, பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு பலம் சேர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
ட்ரம்ப், ஈரான் எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், இந்தத் திட்டம் தற்போது விவாதிக்கப்படுகிறது. ஈரான் தரப்போ, அமெரிக்காவின் இத்தகைய நகர்வுகளை ஏமாற்று வேலை என்று விமர்சித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |