கட்டுநாயக்கவில் அரிய வகை வெளிநாட்டு விலங்குகளுடன் சிக்கிய சந்தேகநபர்!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 38 அரிய வகை வெளிநாட்டு விலங்குகளுடன் இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி- திகன பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான அந்த சந்தேக நபர், பெங்கொக்கில் இருந்து அதிகாலை 12:01 மணிக்கு வந்தடைந்தபோது, அவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
விதிக்கப்பட்ட அபராதம்
அதன்போது, சோதனையின்போது, அவரது பயணப் பைகளில் கினிப் பன்றிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் அடங்கிய கூண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணையைத் தொடர்ந்து, சுங்கத்துறை அந்த சந்தேக நபருக்கு ரூ. 250,000 அபராதம் விதித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் பின்னர் பெங்கொக்கிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய் ஏர்வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |