இந்தியா பாகிஸ்தான் மோதல் தணியுமா.! அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா
காஷமீர் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்து வரும் பதற்றங்களை இந்தியாவும் பாகிஸ்தானும் தணிக்குமாறு அமெரிக்கா (US) வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கு அழைப்பு
அதன்போது, வெளியுறவுச் செயலாளர் ரூபியோ பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது ஒத்துழைப்பை வலியுறுத்தி விசாரணைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய ரூபியோ, காஷ்மீரில் நடந்த மனசாட்சியற்ற தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பையும் வலியுறுத்தியுள்ளார்.
ஜெய்சங்கரின் பதிவு
ஜெய்சங்கருடனான தொலைபேசி உரையாடலின் போது ஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது வருத்தங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussed the Pahalgam terrorist attack with US @SecRubio yesterday. Its perpetrators, backers and planners must be brought to justice.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 1, 2025
ரூபியோவின் அழைப்புக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் (x) தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பதிவொன்றைியும் வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
