கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) என்ற போர்க்கப்பல், இன்று திங்கட்கிழமை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வழக்கமான துறைமுக விஜயத்தை மேற்கொள்வதற்காக, இவ்வாண்டில் இக்கப்பல் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.
கடலோரப் போர் நடவடிக்கை
Independence வகையைச் சேர்ந்த இந்தக் கடலோரப் போர் நடவடிக்கைக் கப்பலின் வருகையை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வரவேற்றுள்ளது.

இந்த விஜயம், அமெரிக்க மற்றும் இலங்கைக் கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவையும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கப்பலின் விஜயங்களைச் சுமுகமாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்கு ஆதரவளித்த இலங்கைக் கடற்படையின் தொழில்முறைச் செயற்பாடுகளையும் ஒத்துழைப்பையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பாராட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |