மதுரோவிடம் ட்ரம்ப் பேசிய ரகசியத் தொலைபேசி அழைப்பு...! அமெரிக்காவின் ராஜதந்திர நகர்வுகள்
அமெரிக்காவிற்கு வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது ஒரு கண், இருப்பினும் அதனை வெளிப்படையாக தெரிவிக்காமல் பல நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் முன்னெடுப்பதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கூறலாம், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது எனக்கு ஒரு கண்என்று.
இந்தநிலையில், இது நான் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு அமெரிக்காவிற்கு நல்ல நிவாரணமாக அமையும் என ட்ரம்ப் தெரிவித்திருக்கலாம்.
இருப்பினும் அவர் அதனை தெரிவிக்காமல் பல தரப்பட்ட நடவடிக்கை முன்னெடுக்கின்றார்” என நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, டொனால்ட் ட்ரம்ப் இறுதியாக வெனிசுலா ஜனாதிபதிக்கு தொலைப்பேசி அழைப்பொன்றை விடுத்ததாகவும் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டி இருந்தார்.
இது தொடர்பிலும் அவர் தெரிவித்த விரிவான ஏனைய கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |