வெளிநாடொன்றில் பயங்கர பேருந்து விபத்து! 17 பேர் பலி - பலர் படுகாயம்
Nepal
World
By Dhilak
நேபாளத்தில் திஷுலி ஆற்றில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் மேலும் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போகாராவில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்ற பயணிகள் பேருந்து இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
விசாரணை
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Image Credit: The Statesman
இந்நிலையில், விபத்து தொடர்பில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்