இலங்கை உட்பட பல நாடுகள் தொடர்பில் ட்ரம்பின் அதிர்ச்சி பதிவு
இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்திகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயரில் உள்ள எக்ஸ் கணக்கை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ளன.
அரசாங்கங்க மாற்றம்
அதன்போது, அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ் (George Soros) USAID இல் இருந்து $260,000,000.00 பெற்று, அதனை இலங்கை, பங்களாதேஷ், உக்ரைன், சிரியா, ஈரான், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குழப்பத்தை பரப்பவும், அரசாங்கங்களை மாற்றவும், தனிப்பட்ட ஆதாயத்தைப் பெறவும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
George Soros received $260,000,000.00 from USAID
— Donald J. Trump 🇺🇸 Update (@TrumpUpdateHQ) February 8, 2025
and used this money to spread chaos, change governments and personal gain in Sri Lanka, Bangladesh, Ukraine, Syria, Iran, Pakistan, India, UK and the US.
அந்த நடவடிக்கைகளுக்காக கடந்த 15 ஆண்டுகளில், USAID சொரோஸுடன் இணைந்த அமைப்புகளுக்கு $270 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியை விமர்சிப்பவர்களுக்கு நிதி
இந்த நிலையில், மேற்படி விடயமானது, சர்வதேச அரசியல் அமைப்புகளில் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி, (BJP) நீண்ட காலமாக சோரோஸ் எதிர்க்கட்சி குழுக்களை ஆதரித்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களுக்கு நிதியளிப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறது.
சொரோஸின் முயற்சிகள் இந்திய அரசாங்கத்தை சீர்குலைத்து தேசிய அரசியலில் தலையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பாஜக தலைவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)