டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Vanan
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு நாணய பெறுமதி
கடந்த ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலர் மட்டுமன்றி ஏனைய வெளிநாட்டு நாணய பெறுமதிகளுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதன்படி, அஸ்திரேலிய டொலருடன் ஒப்பிடும்போது ரூபாவின் பெறுமதி 19.8 சதவீதமும், யூரோவுடன் ஒப்பிடும்போது 14.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாவுடன் ஒப்பிடும்போது 16.5 சதவீதமும் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடும்போது 27.7 சதவீதமும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
