இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்: சர்ச்சையை கிளப்பியுள்ள காணொளி
இந்தியாவில் பாடசாலை மாணவன் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தை எதிர்கொண்ட மாணவன் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், சம்பவம் தொடர்பில் காவல்நிலையித்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதல் சம்பவம்
அங்கு, பள்ளியில் பணம் தொடர்பாக நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு நீண்டு சென்று இவ்வாறான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த மாணவன் கூறியுள்ளார்.
அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து நிர்வாணமாக்கி தாக்கியதாக மாணவன் காவல்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் இந்த சம்பவத்தை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளமையால் தான் மிகவும் வருந்துவதாகவும் தாக்குதலுக்குள்ளான மாணவன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் காணொளி
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் காணொளி உலகம் முழுவதும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
மேலும், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்